கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மழைக்கு சாத்தியம்?

நாட்டின் கிழக்கு பாகங்களில் இன்று (28) அதிகளவிலான மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது எனவும் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது எனவும் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதான நகரங்களின் காலநிலை
நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.

அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மதியம் 02 மணிக்கு பின்னர் சிறிதளவிலான மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25  செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம்  மன்னார் ஆகிய பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் மழை பெய்யலாம்.

மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 27 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை பிற்பகல் வேளையில் மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. கொழும்பு  மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு காலையிலும் மாலையிலும் மழைக்கான காலநிலை காணப்படலாம்.

கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என  எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக இரத்மலானை பிரதேத்தில்  31.8  செல்சியஸ் பாகையும்  குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 13.9 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.

ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்
நாட்டில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக மட்டக்களப்பு பாசிக்குடா பிரதேசத்தில் 155.0 மில்லி மீற்றர் பதியப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்