கல்முனை மாநகர பிரதி மேயர் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா ?
கல்முனை இஸ்லாமாபாத் வீட்டு திட்டத்துக்கும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்கும் செல்லும் வீதி மழை காரணமாக சேதமடைந்து குன்றும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த வீதியை புனரமைத்து தருமாறு வலயக் கல்விப் பணிப்பார் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கல்முனை மாநகர பிரதி மேயர் அப்துல் மஜீதிடம் கோரிக்கை விடுத்தார் . வலயக் கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைய குறித்த வீதியை புனரமைப்பதாக பிரதிமேயர் உறுதியளித்தார் . அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படுமா என்ற அங்கலாய்ப்பில் இஸ்லாமாபாத் மக்களும் ,வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளும் காத்திருக்கின்றனர்
Comments
Post a Comment