காலநிலை பற்றி அனைவரும் கரிசனையாக இருப்பது அவசியம் - வளிமண்டலவியல் திணைக்களம்
இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறித்துள்ளது,
தாழமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவை நெருங்கும் போது இந்த நிலைமை ஏற்படும். காங்கேசந்துறை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதி கொந்தளிப்பாக மாறுவதற்கான சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.எஸ்.எச்.பிரேமலால் தெரிவித்தார்.
மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் காற்றமுக்கம் இலங்கையிலிருந்து 200 கிலோமீற்றர் தூரத்தை நெருங்கும் போது சில இடங்களுக்கு தாக்கம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலநிலை பற்றி கரிசனையாக இருப்பது அவசியமாகும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாண மக்களுக்கு இதன் மூலம் கூடுதலான தாக்கம் ஏற்படலாம். இந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யும். சுனாமி பற்றி அனாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
சுனாமி எச்சரிக்கை தொடர்பான சமிக்ஞையை வழங்கும் நிறுவனங்கள் இந்தியா, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இந்த சமிக்ஞைகளுக்கு அமைவாக இலங்கை செயற்படவிருக்கிறது. இவ்வாறான எந்த சமிக்ஞையும் இதுவரை கிடைக்கவில்லை.
Comments
Post a Comment