ஹரீசுக்கு கொலை அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்குமாறு அக்கரைப்பற்று பொலிசுக்கு முன் சத்தியாக்கிரகம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீசை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் மாகாண சபை தேர்தல் வேட்பாளர்களும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாலை 3 .00 மணியளவில் வேட்பாளர் தவத்தின் வீட்டில் மதிய விருந்து உபாசாரத்தில் கலந்து விட்டு வரும் போதே அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கபபடுகின்றது.
இத்தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் மயிரிழையில் உயிர் தப்பியதொடு அவரது வாகனத்திட்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் அமைச்சர் அதாஉல்லாவின் நெறுங்கிய குண்டர்களாலேயே மேற் கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார்.
இச்சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரிஸ், எம்.ரி.ஹசனலி ஆகியோரும் வேட்பாளர்களான ஏ.எல்.தவம், நசார் ஹாஜி, ஜப்பார் அலி, ஏ.எல்.எம்.நசிர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ. அன்சில் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் அக்கரைப் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த மு.கா.செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினறுமான எம்.ரி . ஹசனலி கருத்து தெரிவிக்கும் போது இச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அக்கரைப்பற்று பொலிசார் மீது எந்த நம்பிக்கை இல்லை என்றும் அக்கரைப்பற்று இன்று நடைபெறவிருந்த நிகழ்வு பற்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்தும் சரியான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டவில்லை. இவ்வாறன நிலையில் நீதியான ஒரு தேர்தல் இங்கு நடைபெருமா என்ற பலத்த சந்தேகத்தை ஏற்பாடுத்தயுள்ளது என்றார்.
இன்னும் 12 மனித்தியாலையத்திட்க்குள் தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் வாக்குறுதி வழங்கியதையடுத்து சத்தியாக் கிரகத்தை முடித்துக் கொண்டனர்.
Comments
Post a Comment