வானில் இன்று நீல நிலா!
நோன்மதி தினமான இன்று இரவு வானில் தோன்றும் பூரண நிலா நீல நிறத்தில் இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஒகஸ்ட் மாதத்தில் முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. கடந்த ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் முறையும்- இன்று வெள்ளிக்கிழமை இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில் இரண்டாவது முறை தோன்றும்போது நிலா நீலமாகத் தோற்றமளிக்குமாம்.
வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின் சாம்பல் துகள்கள் புகை ஆகியவை காரணமாக இந்த நிறம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நீல நிலா 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தோன்றும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை நீல நிலா மாலை 6.13 மணிக்குத் தொடங்கி- இரவு 7.28 மணி வரை தோன்றும் என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர் என்.ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment