3மாகாணங்களிலும் சகல பாடசாலைகளும் 7ம் திகதி மூடப்படும்!
கிழக்கு ,சப்ரகமுவ ,வடமத்திய மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு முதல் நாள் (07ம் திகதி) வெள்ளிக்கிழமை இம்மூன்று மாகாண சபைகளிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
செப். 8ம் திகதி சனிக்கிழமை மாகாண சபைத் தேர்தல் நடைபெற விருக்கிறது. ஆகவே அத்தினத்திற்கு முதல் நாளான 7ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென்று தேர்தல் ஆணையாள ர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கல்வியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது.
கல்வியமைச்சு கிழக்கு மாகாண கல்வியமைச்சினூடாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தலை நேற்று அவசரமாக அனுப்பியுள்ளது. சகல அதிபர்களுக்கும் இதனை தெரியப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சு கிழக்கு மாகாண கல்வியமைச்சினூடாக சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தலை நேற்று அவசரமாக அனுப்பியுள்ளது. சகல அதிபர்களுக்கும் இதனை தெரியப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment