'தன்மானமுள்ள முஸ்லிமால் ஸ்ரீ.மு.காவிற்கு வாக்களிக்க முடியாது'

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கின்ற ஒவ்வெரு வாக்கும் முஸ்லிம் சமுகத்தின் குரல்வளையை அறுப்பதற்கு வைக்கின்ற கூரிய கத்தி என்பதை நினைத்துச் செயற்பட வேண்டும். தன்மானமுள்ளதொரு முஸ்லிமால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இத்தேர்தலில் வாக்களிக்க முடியாது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுகின்ற தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அட்டளைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

க.ஆசுகவி அன்புடீன் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'ஸ்ரீலங்;கா முஸ்லிம் காங்கிரஸ் தனது சமுகத்தைப் பற்றி சிந்திக்காது தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கையும் தனது வருமானத்தையும் உயர்த்திக் கொள்வதற்காக அன்னிய சக்திகளின் அடிவருடியாக மாறி கட்சியை அடகு வைத்து கபட நாடகமாடி வருகின்றது.

கடந்த மூன்று தசாப்த காலமாக இங்குள்ள மக்கள் பட்ட துன்பங்களும் வேதனைகளினதும் வடுக்களும் இன்னும் முழுமையாக மாறாமல் அந்த இழப்பிலிருந்து விடுபடாமல் இருக்கின்ற நிலையில் இந்த சமுகத்தை மீண்டும் அடகுவைத்து பலிக்கடாக்கள் ஆக்க திட்டமிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கட்சியின் அமைப்பாளரான நான் இந்த சமுகத்தின் உயற்சிக்காகவும் எழுச்சிக்காகவும், தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன். இது என்னுடைய சமூகத்துக்காக செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு என்பதை உணர்ந்து நானும் என்னுடைய ஆதரவாளர்களும் முடிவு செய்துள்ளோம். 

இதனை அடைந்து கொள்வதற்காக எனது சகோதரர் எம்.எல்.ஏ.அமீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அவரோடு இணைந்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் தேர்தல் வியூகத்தினால் கவரப்பட்டு சம்மாந்துறை சமூகம் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்து ஒரு புதிய யுகம் படைக்க அணிதிரண்டுள்ளனர். 

அதேபோன்று இந்த அட்டாளைச்சேனை மண்ணுக்கு தலமைத்துவம் வழங்கிய உதுமாலெப்பையை  கடந்த மாகாண சபைத் தேர்தலிலே உங்களது சொற்ப வாக்குகளால் வெற்றி பெறச் செய்ததால் அவர் முழு கிழக்கு மாகாணத்திற்கும் அபிவிருத்தியை அறிமுகப்படுத்திய உதாரண புருஷராக செயற்பட்டார். 

அவரை நாம் மீண்டும் அட்டாளைச்சேனை மக்களின்  அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறச்செய்வதோடு அவரோடு இணைந்து எம் சமூகத்திற்கு பணியாற்றி எம்.எல்.ஏ.அமீர், இளம் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனையும் நாம் வெற்றியடையச் செய்து எதிர்வருகின்ற காலங்களில் எம் சமூகத்திற்கு ஏற்பட இருக்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தலைவர்களாக நாம் அவர்களை உருவாக்க வேண்டும' என்றார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்