வாக்காளர் அட்டைகள் 17-30 வரை விநியோகம்



கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையர் நாளை சந்திப்பு...
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நாளை வெள்ளிக்கிழமை, தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களை நேரில் சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் நாளை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகும். இச்சந்திப்பு குறித்து தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் சுயேச்சைக் குழுத் தலைவர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருப்பதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம்.
மொஹமட் கூறினார். இச்சந்திப்பின் போது ஆணை யாளர் நாயகம் தேர்தல் முன்னேற்பாடுகள், பிரசாரங்கள், சட்டவிரோதச் செயற்பாடுகள், முறைப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவர். மேலும் இக்கூட்டத்தில் வெளிநாட்டுக் கண்கா ணிப்பாளர்களை வரவழைப்பதா? என்பது குறித்த ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, செப்டெம்பர் 08ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அனைத்து வாக்காளர் அட்டைகளும் எதிர்வரும் 17ம் திகதியன்று மத்திய தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.
இந்த வாக்காளர் அட்டைகள் யாவும் ஓகஸ்ட் 30ம் திகதிக்குள் விநியோகிக்கப்படும். அதேவேளை எதிர்வரும் 26ம் திகதி விடுமுறை தினமாகவிருந்த போதும் தபால்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான விசேட தினமாக பிரகடனப்படுத்தப் பட்டிருப்பதாகவும் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்