ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அபேட்சகர்கள் சத்தியப்பிரமானம் (பைஅத்)



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்டம் சார்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டி இடும் அபேட்சகர்கள் சத்தியப்பிரமானம் (பைஅத்) செய்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வூ சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் வியாழன் இரவூ ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நீதி அமைச்சருமான றவூ+ப் ஹக்கீம் தலைமையில் கட்சி சார்பான உலமாக்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 17 பேர் சத்திய பிரமானத்தை வாசித்து தலைவர் மற்றும் உலமாக்கள் முன்னிலையில் உள்ள உலமாக்கள் சாட்சியாக தங்களின் ஒப்பங்களை இட்டு கையளித்துள்ளனர். 

இந்த சத்தியபிரமானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 
அல்லாஹ்வின் பேரருளால் எதிர்வரும் 08ம் திகதி நடைபெறும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராக நான் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அல்லாஹ்வின் அருளும் மக்களின் செல்வாக்கும் நிறைவாகப் பெற்றுஇத் தேர்தலில் வெற்றி பெற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன். இத்தேர்தலில் வெற்றிபெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெளியிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைவர் சகோதரர் றவூ+ப் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவத்திற்கும் மிகவூம் விசுவாசமாக நடந்து கொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும் எந்நிலையிலும் இக்கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ துரோகம் இழைக்கவோ மாட்டேன் என்றும் பணத்திற்கோ பதவிக்கோ ஆசைப்பட்டு கட்சியையூம் தலைமைத்துவத்தையூம்  காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனது சொந்த நலனைவிட  கட்சியினதும் சமூகத்தினதும் நலனையே முதன்மைப்படுத்துவேன் என்றும் எனது முன்னிலையில் உள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கின்றேன். எனது கூற்றுக்கு அல்லாஹ்வூம் சாட்சியாக இருக்கின்றான். என அந்த சத்தியப்பிரமாணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.






இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹசன் அலிஇ கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்இ பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ்இ பைசால் காசிம் உட்பட உலமாக்கள் பலரும் கட்சியின் முக்கிய போராளிகள் பலரும் பிரசன்னமயிருந்தனர்.

அண்மைக்காலமாக கிழக்கு மாகாண சபையில் வெற்றி பெறும் சிலர் அரசின் பக்கம் தாவ உள்ளனர் என தெரிவிக்கப்படுவதை அடுத்தே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உலமாக்களால் மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தேவைப்பாட்டிற்காக ஆரம்பித்துவைத்த இப்பேரியக்கம் அழிந்துவிடாது எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சத்திய பிரமாண நிகழ்வூ ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.      

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்