"நமுனை தசாவதார முத்துக்களுக்கு" நற்பிட்டிமுனையில் பாராட்டு விழா


இவ்வருடம்  நடை பெற்ற  தரம் 5 புலமைப் பரிசில்  பரீட்சையில்  சித்தி பெற்ற  நட்பிட்டிமுனை  மாணவர்கள் 10 பேரை  கெளரவிக்கும்  நிகழ்வு  நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (04)  நற்பிட்டிமுனை அல் - அக்ஸா  மகாவித்தியாலய ஆராதனை மண்டபத்தில்  நடை பெறவுள்ளது. 

பல சமூக சேவைகளைப்  புரிந்து வரும் MANS  சமூக சேவை அமைப்பின்  தவிசாளரும் முன்னாள் கல்முனை  மாநகர சபை உறுப்பினருமான AHHM.நபாரின்  வழிகாட்டலில்  MANS  சமூக சேவை அமைப்பின் தலைவர் JM.அயாஸ்  தலைமையில்  நடை பெறும்  இப்பாராட்டு விழாவில்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் MS.அப்துல்  ஜலீல் பிரதம அதிதியாகவும் ,  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை  வைத்திய அதியட்சகர்  வைத்திய கலாநிதி  ஆர்.முரளீஸ்வரன் ,கல்முனை மாநகர சபை  ஆணையாளர் ஜே .லியாகத் அலி ,கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட்  கனி ,சம்மாந்துறை  உதவிப் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , நற்பிட்டிமுனை உலமா சபை  தலைவரும் கல்முனை அல் -ஹாமியா  அரபுக் கல்லூரி அதிபருமான  யு.எல்.ஏ.கபூர்  மௌலவி, சம்மாந்துறை  தொழில் நுட்ப கல்லூரி அதிபர் எம்.எம்.ஹசன் ஆகியோர்  நிகழ்வில் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்  


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது