நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை சாதனையாளர்களுக்கு கெளரவிப்பு
நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவரும் ,அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் விடுத்த அழைப்பை ஏற்று நற்பிட்டிமுனைக்கு இன்று வருகை தந்த கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன் தரம் ஐந்து புலமை பரீட்சையில் நட்பிட்டிமுனையில் சித்தி பெற்ற 10 புலமையாளர்களையும் பாராட்டும் மகிழ்ச்சி விழாவில் கலந்து கொண்டு புலமாயாளர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கற்றல் உபகரணமும் வழங்கி வைத்தார் .
அத்துடன் நற்பிட்டிமுனையில் சித்தியடைந்த 10 மாணவர்களையும் அடுத்த மாதம் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு கொழும்புக்கு அவரது செலவில் அழைத்து வருமாறும் அவர்களுக்கு கல்வி அமைச்சில் பகல் போசனம் ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் மாணவர்களிடம் தெரிவித்தார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் நற்பிட்டிமுனை அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமுக சேவை அமைப்பின் தலைவரும் ,அமைச்சர் றிசாத் பதியுதீனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான சி.எம்.ஹலீம் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடை பெற்ற பாராட்டு விழா வைபவத்தில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சதொச லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான சி.எம்.முபீத் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment