முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையும் பாராட்டப் படவேண்டியதே!!
முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையும் பாராட்டப் படவேண்டியதே என மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நேற்று நடை பெற்ற கிட்ஸ் வேர்ல்ட் முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து கொண்ட ஊடகவியலாளரும் கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் கடமையாற்றுகின்ற சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான நளீம் எம் பதூர்டீன் தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியை திருமதி தஸ்னீம் பானு பௌஸ் தலைமையில் நடை பெற்ற பாலர் கலை விழாவில் தொடர்ந்து நளீம் எம் பதூர்டீன் உரையாற்றுகையில்
கடந்த காலங்களில் முன்பள்ளி பற்றிய தேடல் காணப்படவில்லை. இன்று இது பற்றிய தேடல் அதிகரிக்கப்பட்டு முன்பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன . இது காலத்தின் தேவையாகும்
பாலர்களின் பல திறமைகளை இனங்காண்பதற்கும் அத்திறமைகளுக்கு சரியான அத்திவாரத்தையிட்டு அரங்கேற்றுவதற்கும் நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதற்கும் ஏற்ற இடமாகவும் தரம் ஒன்றுக்கு மாணவர்களை தயார் படுத்தும் இடமாகவும் இன்று முன் பள்ளிகள் திகழ்கின்றன . இதனால்தான் இன்று அரசின் கவனமும் இதன்பால் ஈர்க்கப் பட்டு வருகின்றன .
வீடுகளில் களியோடு விளையாடிய பிள்ளைகளை வழிப்படுத்தி , நெறிப்ப டுத்தி, அரவணைத்து அரங்கிலே ஆட வைத்து அழகு பார்ப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல . இத்தகைய கடினமான செயற்பாட்டை மேற்கொண்டு ,இச் சின்னஞ்சிறு புள்ளிகளை நட்சத்திரங்களாகவும் , விடி வெள்ளிகளாகவும் மாற்றி உலகிற்கு உகந்தவர்களாக மாற்றுகின்ற உன்னதபணியை மேற் கொள்ளும் முன் பள்ளி ஆசிரியர்களின் இத்தகைய சேவையும் பாராட்டப் பட வேண்டியதே என தெரிவித்தார்
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எம்.உமர் மௌலானா மற்றும் விசேட அதிதியாக கல்முனை சிவில் பாதுகாப்பு உதவி மேற்பார்வையாளர் எம்.ஏ.சி.லத்தீப் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்
Comments
Post a Comment