திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க கோரி எதிர்வரும் திங்கட்கிழமை காலை அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார்.
இன்று (23) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும், மக்களுடைய சக்தி வௌிக்காட்டுவதற்காகவும் இந்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நிதிச் செயலாளர், தொழில் அமைச்சர காமினி லொக்குகே மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியோரின் பங்களிப்பில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், எனினும் முதலாளிமார் சம்மேளனம் 600 ரூபா விலேயே இருப்பதாகவும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கூறியுள்ளார்.
எனினும் நாங்கம் 1000 ரூபா வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், அதனை வலியுறுத்தும் விதமாக திங்கட்கிழமை காலை போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அன்றைய தினம் அனைவரும் வர்த்தக நிலையங்களையும் மூடி கருப்பு கொடியை தொங்கவிட்டு தமது எதிர்ப்பை வௌியிடுமாறு அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Post a Comment