ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகத்துக்கு எதிராக மருதமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகம் உலகையே உலுக்கி விட்டிருக்கும் நிகழ்வாகவே நோக்க முடிகிறது. 
இதுவரையில் சிறுவர், பெண்கள் உள்ளிட்ட ஐயாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்ய்பபட்டிடருக்கின்றனர்.
இந்த வெறித்தனத்தைக் கண்டித்து இன்று(08) மருதமுனையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. மருதமுனை மஸ்ஜிதுல் நூர்  பள்ளி வாசலில் இன்று வெள்ளிக் கிழமை தொழுகையை நிறைவேற்றிய பெருந் தொகையான முஸ்லிம்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல் முன்பாக இருந்து ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மருதமுனை மசூர் மௌலானா வீதி சந்தி வரை  பதாதைகளை ஏந்த எதில்ப்பு கோசங்களுடன் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் வீதியை மறித்து சற்று நேரம் வீதி போக்குவரத்தை தடை செய்து எதிர்ப்பை வெளியிட்டனர்
ரோஹிங்கிய மாநிலத்தில் இன்று இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனைக் கட்டுப்பாடடுக்குள் கொண்டுவர எவராலும் முடியாது என்ற அவலமே காணக்கூடியதாகவிருக்கின்றது. உயிர்ப் பாதுகாப்புக்காக தப்பிச் செல்லும் ரோஹிங்கிய அப்பாவிகளை இந்த இரத்த வெறி பிடித்தவர்கள் துரத்தித் துரத்தி கொலை செய்து வருவதை உலகமே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றமை வேதனைதரக் கூடியதாகவே உள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் ஒன்றும் இன்று மருதமுனையிலிருந்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அராஜகத்துக்கு  எதிராக மருதமுனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்