இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனுடன் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் பேச்சுவார்த்தை
அகமட் எஸ். முகைடீன்;
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பிரதி முதல்வரும்
மெற்றோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப்
இன்று இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனை அவரது
உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது சமகால அரசியல் நடவடிக்கைகள் மற்றும்
மெற்றோபொலிடன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களை பட்டப்படிப்பின் இறுதி
ஆண்டிற்காக மலேசிய நாட்டு பல்கலைக் கழகங்களில் இணைப்பது என்பன தொடர்பில்
விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Comments
Post a Comment