கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

நவீனத்துவ வளர்ச்சியின் பிடியில் கலாச்சாரத்தையும் மாணவர்களையும் காத்துக்கொள்வது பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாக இருக்கிறது. என கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான .எம். பறக்கத்துள்ளாஹ் தெரிவித்தார்.

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் புலமைப்பூக்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,

பறக்கத்துள்ளாஹ் மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய நவீன காலத்தின் ஓட்டம் அனைவரையும் சுறுசுறுப்புடன் இயங்க வழியேற்படுத்தும் அதே வேளை அந்த நவீனத்துவங்களை சரியாக விளங்கிக் கொள்ளாமல் தவறான வழியில் கையாள்கையில் எம்மை பிழையன முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றது.

ஒருமனிதனை இன்னொரு மனிதனைத் தொடர்பு கொள்வதற்கான ஊடகங்கள் எதுவும் இல்லாத காலங்களில் மனிதர்களிடத்தில் நம்பிக்கையும் நாணயமும் காணப்பட்டது. ஆனால் இன்று நினையான தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகள், சமூக வலையமைப்புக்கள், ஸ்கைப், வைபர், வட்ஸ்அப், ஈமெயில் என்ற இனையத்தள ஊடகங்கள் ஏராளமானவை புழக்கத்தில் வந்திருக்கின்ற போதும் ஒரு மனிதனை உரிய நேரத்திற்கு தொடர்பு கொள்ள முடியாத நிலையே தோன்றியுள்ளது. இதனால் உண்மையற்ற மனிதர்களாகவும் மக்கள் இருந்து கொண்டுள்ளனர்.

சில சமூக வலையமைப்புக்களினால் மக்களும், மாணவர்களும் மனஅழுத்தங்களுக்கு உள்ளாகி தனது உயிரைக்கூட மாய்ந்துக்கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுவருவதை அண்மைக்காலத்தில் இடம்பெற்ற குருணாகலை மாணவியின் தற்கொலைச் சம்பவத்தை இந்த இடத்தில் சுட்டிக் காட்ட பொருத்தமாக இருக்கும் என நம்புகின்றேன்.

அதிக வேலைகளையும் அதிக ஓய்வுகளையும் கொண்ட மக்களாக அன்றைய மக்களும் மாணவர்களும் இருந்ததை இன்று உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏனென்று சொன்னால் இன்றை மனிதர்களுக்கும், மாணவர்களுக்கும் ஓய்வெடுத்துக் கொள்ள முடியாத நிலையில் இயங்கிக் கொண்டு போராட்ட வாழ்வினை கொண்டு செல்கின்றனர்.

வீட்டில் பெற்றோருக்கு இருக்கும் அழுத்தங்கள் காரணமாக பிள்ளைகள் சரியாக வழிநடாத்தப்படும் நிலை குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களை கட்டாயமாக வழிநடாத்தப்பட வேண்டிய பொறுப்புவாய்ந்த நிலையில் இருந்து வருகின்றார்கள்.

இன்றைய தலைவர்கள் நேற்றைய இளைஞர்கள் என்பார்கள் அதேபோலவே இங்கே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திவிட்டு பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெறுவற்காக மேடையேறும் சிறுவர்கள் நாளைய இளைஞர்களாகவும், தலைவர்களாகவும் வளர இருப்பவர்கள். இவர்களின் இந்த மேடை ஏற்றம் தொடர்ந்து செல்ல வேண்டும் அதற்காக ஆசிரியர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அன்பாக கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.

அதேபோல் தங்களால் பயிற்றப்பட்டுவரும் மாணவர்கள் அனைவரும் தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் தமது காலசார விழியங்கள் மங்காதவாறும் தாய்நாட்டை  மிகவும் கரிசனையுடன் நேசிப்பவர்களா மாறவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன். என்றார்.

கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலத்திற்கு உள்ளக மேடையினை கல்முனை மாநகர சபை நிதியிலிருந்து கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான .எம். பறக்கத்துள்ளாஹ் அமைத்துக் கொடுத்த்தமையை பாராட்டி இந்நிகழ்வு இடம்பெற்றது.






இந்நிகழ்வு கல்லூரியின் அதிபர் .எம்.எம். பரீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான .எம். பறக்கத்துள்ளாஹ்வும், கௌரவ அதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம். நதீர் மௌலவியும், அதிதிகளாக பிரதி அதிபர் யூ.எல்.எம். அமீன், உதவி அதிபர் .எச். அன்ஸார், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது புலமைப்பரிசில் பரீட்டையில் சிந்தியெய்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டதோடு, ‘வெண்மணல்புலமைப் பூக்கள் தின நினைவு மலரும் வெளியீடு செய்யப்பட்டது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று