நாளை மின்சார தடை இல்லை .குடிநீர் ???

நாளை 22.02.2014 இலங்கை மின்சாரசபை கல்முனைப் பிராந்திய பொறியியலாளர் பிரிவுக்குள் அமுல் படுத்தவிருந்த  மின் வெட்டு கட்டளை  நீக்கப் பட்டுள்ளதாகவும் மின்சாரம் தொடர்ந்து இயங்கும் எனவும்  கல்முனை பிராந்திய பொறியியலாளர் எம் .ஆர் .எம்.பர்ஹான் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாளை மின்சாரம்  காலை 7.30 தொடக்கம் மாலை 6.00 மணி வரை திருத்த வேலை காரணமாக தடைப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. மின்சார தடை  இடம் பெறாது என  இன்று மாலை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம். வானொலிக்கு  மின் பொறியியலாளர் எம் .ஆர் .எம்.பர்ஹான் அறிவித்தல் வழங்கி இருந்தார்.

இதே வேளை மின்சாரம் தடைப்பட்டால் குழாய் நீர் விநியோகமும் தடைப்படும் என நீர் வழங்கல்  அதிகார சபை  அறிவித்தல் விடுத்தது  எனினும் இதுவரை அவர்களது மறு அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்