18ஆவது சார்க் மாநாடு நேபாளில்
18ஆவது சார்க் மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் நேபாளில் நடைபெறவுள்ளது.
மாலைதீவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் 35ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் இலங்கை - இந்தியா-
பங்களாதேஷ்- பூட்டான்- மாலைதீவு- பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய
நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் நேபாள
பிரதிநிதிகள் குழுவுக்கு சங்கர் தாஸ் பயராஹி தலைமைத் தாங்கினார்.
வர்த்தகம்- முதலீடு- வறுமையை ஒழித்தல்-
எரிசக்தி- உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக இந்த வெளிவிவகார அமைச்சர்கள்
மாநாட்டில் கலந்துரையாடப்பட்டது.
2014 மார்ச் முதலாம் திகதி தொடக்கம்
மூன்று வருடங்களுக்கு சார்க் பொதுச்செயலாளராக நேபாள் முன்னாள் வெளிவிவகாரச்
செயலாளர் அர்ஜூன் பகதூரை நியமிக்க இம்மாநாட்டில் அனுமதி வழங்கப்பட்டது.
Comments
Post a Comment