கல்முனை மாநகர சபை எல்லைக்குள் விலங்குகள் அறுக்கும் செயற்பாட்டை வழமை போன்று முன்னெடுக்க முடியும்

முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர்
 
 
அம்பாறை மாவட்டத்தில் விலங்குகளை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அறுக்க முடியாது என தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக  இன்று 21.02.2014 வெள்ளிக்கிழமை வதந்தி பரப்பப்பட்டது. இதனால்  இன்று இறைசிக் கடைகள் வழமைக்கு மாறாக தாமதித்தே திறக்கப் பட்டன .

அம்பாறை மாவட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அறுக்க முடியாது என தடை விதித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் விலங்குகள் அறுக்கும் செயற்பாட்டை வழமை போன்று முன்னெடுக்க முடியும் என்றும் அதற்கு கல்முனை மாநகர சபை  எவ்வித தடையும்  விதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
விலங்குகளுக்கு நோய் பரவுமென கண்டறியப் பட்டால் அதற்கு எடுக்கப்பட வேண்டிய  முனெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவே வர்த்தமானி  அறிவித்தல் ஒன்று வெளிவந்துள்ளது. அதன் பிரகாரம் கல்முனை மாநகர எல்லைக்குள் அறுக்கப்படும் விலங்குகளுக்கு நோய் இல்லை என்பதை கல்முனை மாநகர சபையின் மிருக வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தினால்  போதுமானதாகும்
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு- உணவுக்கு  விலங்குகள் அறுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகையினால் மக்கள் இது விடயத்தில் குழப்பமடைய தேவையில்லை எனவும்  கடந்த காலங்களை விட தற்போது  கல்முனை மாநகர சபை சுகாதார விடயத்தில்  கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் விலங்குகளை மிருக வைத்திய அதிகாரியின் அத்தாட்சிப்படுத்தலுடன் முறையான விதி முறைகளுடன் அறுப்பதற்கும் இறைச்சி வகைகளை பொது மக்கள் உண்பதற்கும் எவ்வித தடையும் இல்லை என்றும் கல்முனை மாநகர  சபை  வெளியாகி உள்ள  வர்த்தமானி அறிவித்தலை  உரிய கவனத்தில் எடுத்து  செயல் படும் என்றும் கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்