தொழில் நுட்ப சமுக சீர்கேடு


அறிவாற்றலை அபிவிருத்தி செய்யப் பயன் படுத்தப்படுகின்ற தகவல் தொழில் நுட்பம் உயிரை மாய்க்கின்ற சாதனமாகவூம் கொள்ளை கொலைக்கான ஆயூதங்களாகவூம் பயன் படுத்தப்படுவது கவலை தருவதாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் தெரிவித்தார்.

நாட்டில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் வகையில் சிவில் பாதுகாப்பு குழுக்களை உசார் நிலையில் வைத்திருப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில் கல்முனை பொலிஸ் பிரிவூக்குட்பட்ட  கல்முனைஇசாய்ந்தமருதுஇகல்முனைக் குடிஇநற்பிட்டிமுனை இசேனைக் குடியிருப்பு இபாண்டிருப்புஇ மருதமுனை இபெரியநீலாவணை கிராமங்களில்  இயங்கும் சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வூ




இன்று 25.02.2014 கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கப்பார் பொலிஸ் நிலையத்தில் நடை பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பிள்ளைகளை வழிகெடுப்பதில் பெற்றௌரின் பங்கு அதிகம் காணப்படுகிறது. பிள்ளைகளுக்கு கையடக்க தொலைபேசியை பெற்றௌரே கொடுக்கின்றனர் அதன் மூலம் பிள்ளைகள் தவறான வழியை சென்றடைந்த பின்னர் கவலை படுவதில் அர்த்தமில்லை.
இரவூ வேளையில் பாடசாலை மாணவர்கள்  வீதிகளில் கைத் தொலைபேசியூடன் நடமாடுகின்றனர் இவர்களை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பு பெற்றாரிடம் இருந்தும் அவர்களை கண்டிக்காமல் இருப்பது கவலை தருகிறது. சமீபத்தில் கல்முனை பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவன் ஒருவன் நள்ளிரவூ 2.00 மணிக்கு தனது காதலியை சந்திப்பதற்கு சென்று எம்மால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன என்று அவர்  தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்