கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வாரா? - முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளா சவால்.
வெற்றி பெற்றால் கிழக்குமாகாண சுகாதார அமைச்சா் எம்.எஸ்.சுபைர்
தனது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வாரா?
என கல்முனை மாநகரசபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்வேட்பாளா்
சிராஸ் மீராசாஹிப் சவால் விடுத்துள்ளார்.
கூட்டமைப்புவேட்பாளர்களை ஆதரித்து அண்மையில் இடம் பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டமொன்றில்கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றமாட்டாது.கைப்பற்றுவதற்கு நாங்கள் விடமாட்டோம் என அமைச்சா்
சுபைர் கூறிய கருத்திற்கு கல்முனைமாநகர சபை வேட்பாளா் ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ”
மாறாக கல்முனை மாநகர சபைத்தோ்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
வெற்றி பெற்றால்கிழக்கு மாகாண சுகாதார அமைச்சா் சுபைர் தனது பதவியை
இராஜினாமா செய்வாரா”? எனசவால் விடுத்துள்ளார்.
இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற தோ்தல் விஞ்ஞாபன வெளியீடு
மற்றும்பத்திரிகையாளா் சந்திப்பின் போது மேற்கண்டவாறு அமைச்சருக்கு
பகிரங்கமாக சாவல்விடுத்தார்.
மேலும் அவா் கருத்துத் தெரிவிக்கையில் நிச்சயமாக கல்முனை மாநகர சபையைஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் இத்தோ்தலில் கைப்பற்றும். அதையும் மீறி ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னனி கைப்பற்றுமேயானால் நான் இத்தோடு அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும்தெரிவித்தார்.
Comments
Post a Comment