அமைச்சர் விமல் வீரவன்ச கல்முனைக்கு விஜயம்


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச அம்பாறை, கல்முனை, சாய்ந்தமருது பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்தார். கல்முனை மாநகர சபை தேர்தலில் தேசிய சுதந்திர முன்னணி சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்திலும் மற்றும் சில நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவதற்காகவே அவர் இங்கு விஜயம் செய்திருந்தார். சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் அமைச்சர் விஷேட உரை நிகழ்த்தினார். வேட்பாளர் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் மஹிந்த சிந்தனையின் கீழ் ஜனசெவன தேசிய வேலைத் திட்டத்தின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் வசதிகளற்ற 100 குடும்பங்களுக்கு வீட்டு கடன் மற்றும் 60 பேருக்கு வீட்டு உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விமல் வீரவன்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெவ்வை, விமலவீர திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று