சாதனைக்கு என் தந்தைதான் காரணம்


வெளி ரியுசன் வகுப்புகள் எதற்கும் சென்று கல்வி
கற்காமல்தான் நான் அல்லாஹ்வின் அருளால் 
சித்தியடைந்தேன் என கல்முனை கல்வி
 வலயத்திற்கு உட்பட்ட நிந்தவூர் 
அல்.அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவன்
 முஹம்மட் முர்சித் ஆத்திப் புலமைப்பரிசில் 
பரிட்சையில் 192 புள்ளிகளைப்பெற்று கிழக்கு 
மாகாணத்தில் முதலாமிடத்தையும் தேசிய
 மட்டத்தில் நான்காமிடத்தையும் பெற்று சாதணை
 படைத்தவர  தெரிவித்தார்.

  அப்துல் றஹிம் ஹம்ஸத் தம்பதியரின் மூன்றாவது 
புதல்வரான இவர மேலும் கூறுகையில்…………………………………………………………………………………………….

நான் பாடசாலையில் எனது ஆசிரியர்கள் கற்றுத்
 தருவதை வீட்டிலும் எனது தந்தையின் வழிகாட்டலில்
 கற்றதோடு அதிக பயிற்சிகளையும் மீட்டல்களையும் 
செய்து வந்தேன். எந்தவொரு வெளி மேலதிக ரியுஸன்
 வகுப்புகளை நான் நாடவுமில்லை அதற்குச் செல்லவும் 
இல்லை. ஆனால் எனது தந்தையின் வழிகாட்டல்
 பாடசாலையில் ஆசிரியர களிடமிருந்து கிடைப்பது 
போன்று கிடைத்தமைக்கு நான் பெறுமையடைகிறேன்.
எனது சக நண்பா்களும் பல ரியுஸன் வகுப்புக்கச்
 செல்வதாகவும் என்னையும் வரும்படியும் அழைத்த
 போதிலும் நான் அதை விரும்பவில்லை. காரணம் அந்த
 நேரத்தை மீதமாக்கி வீட்டில் பயிற்சிகளில் அதிகம்
 ஈடுபட்டால் அது போதும் என்ற தன்நம்பிக்கை 
அல்லாஹ்வின் உதவியால் எனக்கு இருந்தது எனவும்
 கூறினார்.

மேலும் அவா் கருத்துத் தெரிவிக்கையில்……………………………………………………

எனது வீட்டில் ரி.வி றேடியோ எதுவும் இல்லை. 
அதுவும் எனக்கு சாதகமாக அமைந்தது. என்றதோடு நான் 
இவ்வாறு திறமையாக சித்தியடையக் காரணமாக இருந்த
 இறைவனுக்கு முதலில் நன்றி கூறுவதோடு எனக்கு 
கஷ்ட்டப்பட்டு கல்வி கற்றுத்தந்த ஏ.பி.அஸ்வா் 
ஆசிரியா் உட்பட ஏனைய ஆசிரியா்களுக்கும் எனது பெற்றோர்களுக்கும் நன்றிகளைக் கூறிக் கொள்ள
 விரும்புகிறேன். என்றார்.

இவா் பாடசாலையில் சிறந்த ஒழுக்கமுடைய
 மாணவனாக திகழ்ந்ததோடு கணித 100 கட்டப் போடடியில்
 ( HUNDRED CHARTS ) வலயமட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தினப் போட்டிகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பற்றினார்.

இவா் மாலை வேளையில் 5 மணி தொடக்கம் 6 மணி வரை விளையாட்டில் வீட்டில் ஈடுபடுவார். இவரின் எதிர்கால இலட்சியம் பைலட் அல்லது பொறியிலாளராக வருவதாகும்.
இவரின் தந்தை விஞ்ஞான பட்டதாரி ஆசிரியராக நிந்தவுா்
 அல்- மதீனா வித்தியாலயத்தில் கடமையாற்றுகிறார்.
 அத்தோடு பாமஸி ஒன்றையும் நடாத்துகிறார்.
 தாய் இல்லதத்ரசியாவார்.
இவரைப்பற்றி பெற்றோர்கள் கூறுகையில்…………………………………………………………..

பிரதான வீதியில் வசிக்கும் இவா் தினமும் பாடசாலைக்கு 
செல்லும் போது தாய் இவருக்கு முத்தம் கொடுத்து 
அனுப்புவார்
 வீதியை கடந்து அவா் மறு புறத்திலிருந்து தாய்க்கு 
கைகளால்
 டாட்டா காட்டிய பிறகுதான் பாடசாலை செல்வார்.
 இது தவரினால் பாடசாலைக்குச் செல்லமாட்டாராம். 
இது ஆத்திபின் வழமையான பழக்கமாகும். அத்தோடு
 தந்தையின் கடையில் உள்ள தனி மேசையில் இரவு 7 மணி 
தொடக்கம் 9 மணி வரை பயிற்சிகளை தந்தையின் உதவியுடன் மேற்கொள்வார். எனக் கூறினா்.

இவரை அன்மையில் பாடசாலையின் அதிபா்
ஆசிரியா்கள் ஊா் பிரமுகா்கள் கௌரவித்ததோடு திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினா் பியசேனவும் பாரிசில்களை வழங்கி கொளரவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
  

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது