விசர் நாய் கடியால் வருடாந்தம் 2000 பேர் பாதிப்பு!
- Get link
- X
- Other Apps
By
kalmunainews
-
இன்று ‘உலக விசர்நாய்க்கடி’ எதிர்ப்பு தினம்
இலங்கையில் வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு இலக்காகின்றனர்.
விசர் நாய்க்கடிக்கு இலக்காகியவர்களுக்கு சிகிச்சையளிக்கவென அரசு வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது.
2016 ஆம் ஆண்டு விசர்நாய்க்கடியினால் ஏற்படும் நீர் வெறுப்பு நோயற்ற நாடாக
இலங்கையை ஆக்குவதே எமது இலக்கு என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
உலக விசர்நாய்க்கடி எதிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை
முன்னிட்டு நாடுமுழுவதும் நோய் ஒழிப்பு தொடர்பாக மக்களுக்கு
தெரிவுபடுத்தும் பல செயற்திட்டங்களை அமைச்சு முன்னெடுத்துள்ளது.
சுகாதார அமைச்சிடம் தற்போதுள்ள தரவுகளின்படி இலங்கையில் 30 இலட்சம்
நாய்கள் உள்ளன. வருடாந்தம் 2000 பேர் விசர்நாய்க்கடிக்கு ஆளாகின்றனர்.
வருடாந்தம் 32 பேர் மரணிக்கின்றனர்.
கொள்கையளவில் நாய்களை கொல்வதில்லை என அரசு தீர்மானித்துள்ள போதும்
நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
சத்திர சிகிச்சை மூலமும்- தடுப்பூசி மூலமும் கருத்தடை செய்யப்படுகிறது.
கடந்த எட்டு மாதங்களில் விசர் நாய்க்கடியினால் நீர் வெறுப்பு நோய; ஏற்பட்டு 32 பேர்
உயிரிழந்துள்ளனர். 36552 நாய்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 22527 நாய்களுக்கு தடுப்பூசி மூலம் கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் மற்றும் கட்டாக்காலி நாய்களுக்கு நீர்வெறுப்பு நோய் பீடிக்கப்படாமலிருக்க வென 4 இலட்சத்து 60 ஆயிரத்து 144 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
2011 ஜூன் 30 ஆம் திகதிவரை விசர்நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென
152524 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் பொதுவாக நாய்கள்- பூனைகள்
உள்ளிட்ட மிருகங்களால் கடிக்குள்ளானவர்களுக்கென முதலுதவியாக வழங்கப்படும்
தடுப்பூசிகள் 38477 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
விசர்நாய்க்கடியினால் ஏற்படும் “நீர் வெறுப்பு நோய்” முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய
ஒரு நோய் மட்டுமல்ல முற்றாக ஒழித்துவிடக் கூடியது. நாயினாலோ அல்லது பூனை
போன்ற மிருகங்களினால் கடிக்குள்ளா னவர்கள் உடனடியாக அருகிலுள்ள விசர்நாய்க்கடி
தடுப்புப் பிரிவுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
அநேகமானோர் ஏதாவது முதலுதவியை செய்த பின்னர் மெளனமாக இருந்துவிடுவர். விசர்நாய்க்கடியினால் ஏற்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டால் குணமாக்குவது கடினமாகிவிடும்.
2016 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோயற்ற நாடாக இலங்கையை உருவாக்கும் இலக்கை நோக்கி
இலங்கை பயணிக்கவுள்ளது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி “உலக நீர் வெறுப்பு நோய்” ஒழிப்பு தினத்தின் தேசிய நிகழ்வு பொலன்னறுவையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment