தேசிய காங்கிரசின் தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையில் திறந்து வைப்பு
எதிர் வரும் எட்டாம் திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான தேர்தல் செயலகம் நட்பிட்டிமுனையில் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலை சின்னத்தில் 2ஆம் இலக்கத்தில் போட்டி இடும் நற்பிட்டிமுனை அப்துல் கபூர் நௌசாத் தலைமையில் செயலகம் திறந்து வைக்கப்பட்டது. தேசிய காங்கிரஸ் நற்பிட்டிமுனை மதிய குழு தலைவர் எம்.ஐ.நூர்முகம்மது.,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஐ.எல்.ரவுப்டீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment