நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்



ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதத்தில் உலகவாழ் அனைத்து இந்துக்களாலும்
 கொண்டாடப்படும் ஒன்பது நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி 
எனப்படுகின்றது. உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே 
நவராத்திரியின் அடிப்படைத் தத்துவமாகும்.

இந்த நாட்களில் அன்னை ஆதிபரா சக்தியை ஒன்பது நாட்களும் வெவ்வேறு 

ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர்.

அந்தவகையில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைதேவியையும், அடுத்த 

மூன்று நாட்கள் மகாலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் 
பூஜித்து விரதமிருந்து வழிபடுதல் மரபாகும் .

துர்க்கையை வழிபடுவதால் வீரமும், மகாலக்ஷ்மியை வழிபடுவதால் செல்வமும்,

 சரஸ்வதியை வணங்குவதால் கல்வியும், அறிவும் நம்மை வந்து பேரும் என்பது ஐதீகம்.

மகிஷன் எனும் அசூரனை அழிக்க துர்க்கா தேவி ஒன்பது நாள் விரதம் இருந்து 

ஆயுதபூஜை செய்து பத்தாம் நாள் அன்னை தனது மென்மையான கரங்களில் வாள்
 ஏந்தி போர் முனையில் மகிஷாசூரனை அழித்து வெற்றிவாகை சூடினால் என நவராத்திரி 
தொடர்பிலான வராலாற்றுக் கதைகள் கூறுகின்றன.

தேவி விரதம் இருந்த ஒன்பது தினங்கள் நவராத்திரி எனவும் அசுரனை வென்ற பத்மாம் நாள் 

விஜயதசமி எனவும் இந்துக்களால் போற்றப்பட்டு வருகின்றது.விஜயதசமி என்றால் வெற்றி 
தருகிற நாள் என்று பொருள்படும்.

அசூரனை அன்னை வெற்றிகொண்ட இந்த நாளில் ஆரம்பிக்கப்படும் சகல காரியத்திலும் 

வெற்றிகிட்டும் என்பது சான்றோர் வாக்கு குறிப்பாக இந்த நாளிலேயே குழந்தைகளுக்கான
 ஏடு தொடக்குதல் மற்றும் புதிய வேலைகளையும் மக்கள் மேற்கொள்வது வழக்கம்.

நவராத்திரி விழாவினை உத்திரபிரதேசகத்தில் ராமலீலா என்றும் மேற்கு வங்கப்

 பிரதேசத்தில் 
காளிதுர்கா பூஜை என்றும் கர்நாடகத்தில் மைசூர் தசரா எனவும் கொண்டாடப்பட்டு
 வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அன்னை ஆதிபராசக்தியை இந்த ஒன்பது தினங்களிலும் விரதம் இருந்து பூஜை செய்து 

வழிபாடு செய்வதால் எல்லாநலன்களும் கிட்டும் என்பது எம் வழி வந்த மரபாகும். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்