வாக்களிப்பு முடிந்தது, 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும், நள்ளிரவில் முடிவுகள் வெளியாகும்
தென் மற்றும் மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. தென், மற்றும் மேல் மாகாணசபைகளுக்கு இன்று காலை 7 மணி தொடக்கம், வாக்களிப்பு இடம்பெற்று வந்தது.
மாலை 4 மணியுடன் வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, வாக்குப்பெட்டிகளை முத்திரையிட்டு, வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தென் மாகாணசபைக்கு காலி, மாத்தறை, அம்பாந்தாட்டை ஆகிய மாவட்டங்களிலும், மேல் மாகாணசபைக்கு கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு இடம்பெற்றது.
மகிந்த ராஜபக்ச தமது சொந்த ஊரான, மதமுலான டி.ஏ.ராஜபக்ச மகா வித்தியாலயத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்களும் இன்றைய தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
இரவு 8 மணியளவில், வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டு, நள்ளிரவுக்கு முன்னர் முடிவுகள் தொகுதி ரீதியாக அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில், சிறிலங்காவின் ஆளும்கட்சி ஜெனிவா தீர்மானத்தை முன்னிறுத்தியே பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment