வாக்குச் சீட்டுகளும் பெட்டிகளும் சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு!
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் இன்று காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
நான்காயிரத்து 253 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 பேர் இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் 420 நிலையங்களிலும், தென் மாகாணத்தில் 188 நிலையங்களிலுமாக மொத்தம் 608 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
Comments
Post a Comment