நிந்தவூர் கடற்கரையில் சடலம் மீட்பு
நிந்தவூர் 9 ஆம் பிரிவுக் கடற்கரையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது என்று சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலம் நிந்தவூர் 11 ஆம் பிரிவைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் முகம்மது பாகிர் (வயது - 39) என்பவரது என்று அவரது குடும்பத்தவர்களால் இனங்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சடலம் காணப்பட்ட இடத்தில் கிருமிநாசினி போத்தல் காணப்பட்டது என்றும் இது தற்கொலையாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, குறித்த நபர் முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு ஒன்றுக்காக நேற்று காதி நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment