மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பரிசு மழை நிகழ்ச்சி

(அகமட் எஸ். முகைடீன்)
மெட்ரோ பொலிடன் கல்லூரியின் பரிசு மழை நிகழ்ச்சி அண்மையில் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமாகிய கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகிழ்வில் ஓய்வுபெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளா் மணிப் புலவர் மருதூர் ஏ மஜீட், வர்ணம் தொலைக் காட்சியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்.ஹிசாம் முகம்மட், சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த தோமஸ், பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

மெட்ரோ பொலிடன் கல்லூரியின் அனுசரணையில் வர்ணம் தொலைக்காட்சியில் அண்மையில் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. மேற்படி திரைப்பட ஒளிபரப்பின்போது கேட்கப்பட்ட வினாவிற்கு குறுஞ்செய்தியின் (SMS) மூலம் சரியான விடையினை அனுப்பி வைத்தவர்களுக்கு குலுக்கல் முறையின் மூலம் மெகா பரிசு உள்ளிட்ட ஆறுதல் பரிசில்கள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்ட மாணவனுக்கு மெகா பரிசான ஒரு இலட்சம் ரூபா பரிசுக் கூப்பன் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு மேலும் தெரிவு செய்யப்பட்ட இரண்டு அதிஷ்டசாலிகளுக்கு ரூபா 50,000.00​, மூன்று அதிஷ்டசாலிகளுக்கு ரூபா 20,000.00 மற்றும் இரண்டு அதிஷ்டசாலிகளுக்கு முறையே ரூபா 10,000.00, ரூபா 25,000.00 பெறுமதியான பரிசுக் கூப்பன்கள் மற்றும் மெட்ரோ பொலிடன் கல்லூரி இலட்சினை பொறிக்கப்பட்ட டிசேட் என்பன வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி பரிசுக் கூப்பங்களை பயன்படுத்தி குறித்த கல்லூரியினால் வழங்கப்படும் கற்கை நெறிகளுக்கான விலைக்கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரினால் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீட், வர்ணம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் என்.ஹிசாம் முகம்மட் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவைச் சேர்ந்த தோமஸ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது