கிழக்கு உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

(ஹாசிப் யாஸீன்)
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்களில் தற்காலிகமாக கடமையாற்றிய ஊழியர்களில் 650 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தினை கிழக்கு மாகாண சபை முன்னெடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றிய 110 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று சாய்தமதருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (27) நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹஸன் அலி, கிழக்கு மாகாண அமைசர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை, எம்.ஜ.எம்.மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், ஏ.எல்.எம்.நஸீர், முதலமைச்சரின் செயலாளர் யூ.எல.அஸீஸ் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்நியமனங்கள் வழங்கும் நடவடிக்கை கிழக்கு மாகாண சபையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும் என நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள் குறிப்பிட்டனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி