சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலை சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் அவர்களுக்கு பிரியாவிடை கெளரவிப்பு
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்திய சாலையில் கடந்த 07 வருடங்களுக்கும் மேலாக சத்திர சிகிச்சை நிபுணராக பணியாற்றி பல சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுள்ள சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் அவர்களுக்கு வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்களால் பிரியாவிடை வைபவம் சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் நடாத்தப் பட்டது.
சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் அவர்களுக்கு வைத்திய அத்தியட்சகர் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார் . வைத்தியர்கள் தாதி உத்தியோகத்தர்கள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர் .
80க்கும் மேற்பட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்தியர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யு.எம்.சமீம் நினைவு சின்னம் வழங்கி வைத்தார் .
Comments
Post a Comment