எடுத்த காரியத்தை மிகவும் சிறப்பாகச் செய்யும் ஆற்றலையும் திறமையையும் கொண்டவர் மாகாணப் பணிப்பாளர் எம்.சி.அன்சார்


கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி 

(பி.எம்.எம்.ஏ.காதர்) 
மருதமுனை மண்ணின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலே கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற எம்.சி.அன்சார் அவர்களின் சேவை இந்த மாகாணத்திலே பிரதிபலிப்பதென்பது மருதமுனை மண்ணுக்கு கிடைத்த பெருமையாகும்.
மருதமுனை மண் பலதரப்பட்ட அறிவியலாளர்களை உருவாக்கியிருக்கின்றது இதில் நானும் ஒருவன் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.அந்த வகையில் இந்த இப்போது கிடைத்திருக்கின்ற இந்தப் பதவியின் மூலம் கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சேவை வழங்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது  என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹமட் கனி தெரிவித்தார்.
மருதமுனை கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கின்ற மருதமுனைச் சேர்ந்த எம்.சி.அன்சாருக்கான வரவேற்பும், கௌரவிப்பும் ஞாயிற்றுக்கிழமை மாலை(12-02-2017)பேரவையின் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது 
இதில் விஷேட விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :- எம்.சி.அன்சார் மிகவும் துடிப்பானவர் எடுத்த காரியத்தை மிகவும் சிறப்பாகச் செய்யும்  ஆற்றலையும் திறமையையும்  கொண்டவர் படிப்படியாக தனது பதவி நிலையை உயர்த்திக் கொண்டவர் இப்போது அவருக்கு இறைவன் நல்ல உயர் பதவியை வழங்கியிருக்கின்றான் இப்பதவியின்; மூலம் அவர் மக்களுக்கு நல்ல சேவையை வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.
இந்த நிகழ்வில் பேரவையின் சார்பாக அதன் தலைவர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், பிரதேச செயலாளர் எம்.எச்.முஹமட் கனி,பேரவையின் பொருளாளர் எஸ்.எல்.எம்.நழீம்ய ஓய்வு  பெற்ற தலைமைக் கிராம அதிகாரி ஏ.எச்.ஏ.ழாஹிர்அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லாஹ்  ஆகியோர் அன்சாருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொதிகள்  வழங்கி கௌரவித்தார்கள் .இங்கு பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.






Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்