பரீட்சை உத்தியோகத்தர்கள் பங்குபற்றும் முக்கிய கூட்டம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய பரீட்சை கடமைகளில் ஈடுபடவுள்ள கல்முனை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (26) காலை 8.00 மணிக்கு அக்கரைப்பற்று ஆயிஷா பாலிகா மஹா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கல்முனை கல்வி மாவட்டத்தில் உள்ள கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடவுள்ள இணைப்பாளர்கள், உதவி இணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி மேற்பார்வையாளர்கள் என சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித் தார்.
பரீட்சை திணைக்களத்தின் பிரதி பரீட்சை ஆணையாளரினால் நடத்தப்படும் இவ் அறிவுறுத்தல் கூட்டத்துக்கு தவறாது கலந்து கொள்ளுமாறு சகல உத்தியோ கத்தர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின் றனர். கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களும் தாமதமாகி சமுகமளிப்பவர்களும் பரீட்சை கடமையிலிருந்து தாமாகவே விலகியதாக கருத்திற் கொள்ளப்படுவர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்