க.பொ.த. உயர்தரப் பரீட்சை 30 முதல் டியூசன்களுக்கு தடை
பரீட்சை முடியும் வரை தடை அமுலில்
க.பொ.த உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட் சைகள் முழுமையாக முடிவடையும் வரை டியூசன் வகுப்புக்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முற்றாக தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையின்படி, பிரத்தியேக வகுப்புக்கள், குழு வகுப்புக்கள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல், பரீட்சைக்கு வரக்கூடிய கேள்விகளை தொகுத்து வழங்குதல், போஸ்டர்கள், பெனர்கள் ஓட்டுதல் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், வகுப்புக்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் விளம்பரம் செய்தல் ஆகிய அனைத்து விடயங் களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. புஸ்பகுமார தெரிவித்தார்.
இத்தடையை மீறி செயற்படும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
Comments
Post a Comment