புனித நோன்புப் பெருநாள் செவ்வாய்க்கிழமை
புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப் தலைப் பிறை நாட்டின் எந்தவொரு பாகத்திலும் இன்று மாலை தென்படாமையினால் புனித ரமழான் மாதத்தினை 30 நாட்களாக நிறைவு செய்யுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்தது.
இதனால் புனித நோன்புப் பெருநாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டாடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.
புனித ஷவ்வால் தலைப் பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதன்போது தலைப் பிறை நாட்டின் எந்தப் பாகத்திலும் தென்படாமையினால் புனித ரமழான் மாதத்தினை 30 நாட்களாக நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில், தக்கியாக்கள் மற்றும் சாவியாக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment