மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனித். பி எழுதிய சமூகவியல் நூல் வெளியீட்டு விழா
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் திருமதி ஜெனித். பி எழுதிய சமூகவியல் நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் நட்பிட்டிமுனையில் நடை பெறவுள்ளது.
நட்பிட்டிமுனை நெடா அமைப்பின் அனுசரணையுடன் நட்பிட்டிமுனை சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் எஸ்.சபாரெத்தினம் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (25) மாலை நட்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடை பெறும் .
நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன்,ரீ.கலையரசன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் ,கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் ,கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.மயில் வாகனம் ,நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் டீ.மோகனகுமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் முன்னிலையிலும் நூல் வெளியீடு இடம்பெறுவதுடன் நூலின் அறிமுகவுரை தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் சஞ்சீவி குமார் நிகழ்த்துவார் . தென் கிழக்குப் பல்கலைக்கழக முது நிலை விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராசா ,கிழக்குப் பல்கலைக் கழக முது நிலை விரிவுரையாளர் ஞ.தில்லைநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளதுடன் நூல் ஆசிரியர் திருமதி ஜெனித். பி ஏற்புரையினை வழங்குவார்
Comments
Post a Comment