துப்பாக்கி வைதிருந்தவற்குகு ஆயுட்கால சிறைத்தண்டனை
அனுமதிப்பத்திரமின்றி
சட்டவிரோதமாக T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்ட
பட்ட ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை
விதித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம்
கடந்த வியாழக்கிழமை இந்தத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்
சுலைமான் முகம்மத யூசுப் றியாஸ் என்பவர்
மீது அனுமதிப்பத்திரமின்றி 2006.6.24 ஆம் திகதி T56 ரக
தன்னியக்கத்துப்பாக்கி ஒன்றைத் தன் உடைமையில் வைத்திருந்ததாகக்
குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி
சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது விரிவாக பார்க்க
மேற்படி வழக்கு விசாரணையின் போது
கூண்டிலிருந்து அளித்த வாக்கு மூலம் நம்பகத்தன்மையில்லாதது என்று
நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி
சந்திரமணி விஸ்வலிங்கம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு
கூறியுள்ளார் என்று அறிய முடிகின்றது
Comments
Post a Comment