தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது !!

கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட அப்துல் மனாப் நிஜாமியாவின் மரணம் தற்கொலை என மட்டக்களப்பு சட்ட வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்ததனை தொடர்ந்து ஜனாஸா மீண்டும் பழைய இடத்தில் அன்றைய தினமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது இரண்டு மாதங்களுக்கு முன் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது .
21 வயதான திருமணமாகி 14 மாதங்கள் கடந்த நிஜாமியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் கணவரின் தந்தை கல்முனை பொலிஸாருக்கு செய்திருந்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.றிஸ்வியின் உத்தரவின் விரிவாக பார்க்க
பேரில் ஜனாஸா பரிசோதனைக்காக கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை பரிசோதனை செய்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர்கள் பெண்ணின் மரணம் தற்கொலையென அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்