முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை நேற்று சனிக்கிழமை காலை சந்தித்து பேசியுள்ளது இந்த சந்திப்பு கொழும்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், ஹரிஸ் மற்றும் அஸ்லம் ஆகியோரும் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்  விரிவாக பார்க்க
இந்தச் சந்திப்பு குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களை ஒதுக்கி விட்டுத்தீர்வொன்று காண முடியாது. அரசுக்கும் தமிழ்த் தரப்புக்குமிடையே பேச்சுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையை சரியான தளத்தில் கொண்டு செல்வதற்கு முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்துக்குமிடையே நேற்று மாலை சந்திப்பொன்று நடைபெற்ற நிலையில் அதற்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே இந்த சந்திப்பு நடை பெற்றுள்ளது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்