65 காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகள்
நாட்டின்
சகல காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் தனித்தனியான முஸ்லிம்
தீடீர் மரணவிசாரணை அதிகாரிகளை நியமிக்க நீதியமைச்சர் ரவூப் ஹகீம்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது
தற்போது இலங்கையில் உள்ள 65 காதி
நீதிமன்றப் பிரிவுகளுக்கும் முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரி கள்
நியமிக்கபடவுள்ளனர் என்பதுடன் முஸ்லிம் பெண் சமாதன நீதவான்களை
நியமிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது விரிவாக
பார்க்க
முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகள்
போதாமையால் ஜனாக் சகளை உரிய நேரத்தில் அடக்கம் செய்வதிலும் அவற்றை வைத்திய
சாலைகளில் இருந்து பெற்று கொள்வதிலும் பெரிதும் சிரமங்கள் எதிர்கொள்வதை
தவிர்க்கும் முகமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது மேலும் கணவனை இழந்த
‘இத்தா’ இருக்கவேண்டிய மனைவியர் எதிர்கொள்ளும் சிக்கல்களை தவிர்க்கும்
முகமாக முஸ்லிம் பெண் சமாதன நீதவான்களை நியமிக்கவும் நடவடிக்கைகளை
நீதியமைச்சர் ரவூப் ஹகீம் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது
Comments
Post a Comment