கல்முனையில் நிர்மானிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் விரைவில் கையளிக்கப்படும்
கல்முனை பஸ் நிலையத்தில் USAID
நிறுவனத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் மிக விரைவில்
மக்களிடம் கையளிக்கப்படும் என கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா
தெரிவித்துள்ளார்.
சுனாமியால் அழிவடைந்த வர்த்தக கடை
தொகுதிகளை புதிதாக நிர்மாணிக்க 2007 ஆண்டு கல்முனை மாநகர சபையின்
முயற்சியாலும் USAID நிதியுதவியாலும் ஆரம்பிக்கப்பட்டது என்பது
குறிபிடத்தக்கது
கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில்
நிர்மாணிக்கப்பட்டுள்ள 19 கடைத்தொகுதிக்கும் 2008 ஆம் ஆண்டு கல்முனை மாநகர
சபைக்கு கையளிக்கப்பட்டது. இக் கடைகளை மக்களுக்கு வழங்குவதில் பல
நடைமுறைச் சிக்கல்கள் நிலவியதால் கடைகளை வழங்குவதில் பல தாமதங்கள்
ஏற்பட்டன விரிவாக பார்க்க
கடைகளின் பெறுமதியை மதிப்பிடுவதற்காக
மதிப்பிட்டு திணைக்களத்திற்கு அறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு அறிக்கை கிடைத்ததும் பகிரங்க கேள்விப் பத்திரம் மூலம்
இக்கடைத்தொகுதிகள் வழங்கப்படவுள்ளதாக மேயர் மேலும் தெரிவித்தார்
Comments
Post a Comment