முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம்
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி சம்பளம் வழங்கப்பட வேண்டுமென திறைசேரி சகல அரச திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது.
நோன்புப் பெருநாள் ஆகஸ்ட் மாதம் 09ம் திகதி கொண்டாடப்படவுள்ளதால் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான பணிப்புரையை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாகவும் இதற்கமைய தேவையான நிதி ஒதுக்கீடு சகல அமைச்சுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக திறைசேரிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
தற்போது சகல அரசாங்க நிறுவனங்க ளிலும் சகல முஸ்லிம் உத்தியோகத்தர்க ளுக்கும் பெருநாள் முற்பணம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment