பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ்

தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆளுகை காலத்தில் கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக கடமையாற்றி இருந்தார். பின்னர் அவரது ஆளுகை காலம் முடிவடைந்ததும் தற்காலிக பீடாதிபதியாக நசீர் அஹ்மட் உபவேந்தரால் நியமிக்கப்பட்டார்.

இன்று 24-07-2013 இடம்பெற்ற உபவேந்தர் தலைமையிலான பீடாதிபதி தெரிவின் போது கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் ஆகியோர் போட்டியிட்டனர் இதன்போது இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் கலாநிதி சபீனா இம்தியாஸ் 12 வாக்குகளையும் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் 09 வாக்குகளையும் பெற்றனர். 03 மேலதிக வாக்குகளை பெற்ற கலாநிதி சபீனா இம்தியாஸ் நடப்பு ஆளுகை காலத்துக்கான பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலை கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான முதல் இரண்டு ஆளுகை காலதத்திலும் செல்வி வினோதினி சந்தானமும் மூன்றாவது ஆளுகை காலதத்தில் நசீர் அஹ்மட் அவர்களும் அடுத்த நான்காவது ஆளுகை காலதத்தில் எ.எம்.றஸ்மியும் ஐந்தாவது ஆளுகை காலதத்திலும் நடப்பு ஆளுகை காலத்துக்கும் காலதத்தில் கலாநிதி சபீனா இம்தியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்