உயர்தர வகுப்பிற்கான தொழில்நுட்ப பாடநெறி
கல்வியமைச்சு நாடு தளுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளில் உயர்தர வகுப்பிற்கான தொழில்நுட்ப பாடநெறியினை இன்று உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைத்ததது. அதனடிப்படையில் கல்முனைத் தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு பாடநெறியினை ஆரம்பித்து வைப்பதற்கு பிரதம அதிதியாக வருகை தந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் கல்லூரியின் தொழில்நுட்ப பாட வகுப்பறை திறந்து வைக்கப்படுவதனையும் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் உரையாற்றுவதனையும் கலந்து கொண்டோரின் ஒரு தொகுதியினரையும் காணலாம்.
Comments
Post a Comment