சிசுவை வயலில் வீசிய பெண் தடுப்புக் காவலில்..!!

அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவில் சிசுவொன்றை வயலில் வீசிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 11ஆம் இலக்க குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண், கடந்த 13ஆம் திகதி இரவு சிசுவைப் பிரசவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார், உயிரிழந்த நிலையில் வயலில் இருந்து சிசுவின் உடலை நேற்று கண்டெடுத்ததுடன் அதன் தாயாரையும் கைது செய்துள்ளனர். திருமணமாகாத 30 வயதான பெண் ஒருவரே இரகசியமாக குழந்தையைப் பிரசவித்த பின்னர் வயலில் வீசியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தப் பெண் பொலிஸ் பாதுகாப்புடன் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த சிசுவின் சடலமும் அதே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வவுனியா – அம்மிவைத்தான் பகுதியில் பிறந்து ஒரு நாள் நிரம்பிய சிசுவொன்றை நிலத்தில் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சிசுவின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்