திட்டமிடல் உத்தியோகத்தர்கள் 118 பேர் நேற்று கடமையேற்பு!
இலங்கைத் திட்டமிடல் சேவையின் மூன்றாம் வகுப்பிற்கு திறந்த போட்டிப் பரீட்சை அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 118 உத்தியோகத்தர்கள் நேற்று முதல் தமது கடமைகளை நிதி, திட்டமிடல் அமைச்சில் ஏற்றுக் கொண்டனர்.
இவர்களுள் 114 பேர் சிங்கள மொழி மூலமும், 04 பேர் தமிழ் மொழி மூலமும் நியமனம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் கொழும்பு, டைம்ஸ் கட்டடத்தில் அமைந்துள்ள “மீலோதா” பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
தமிழ் மொழி மூலம் கிழக்கு மாகாணத்தில் ரி.கே. றிஹான், எம்.எம். எம். சப்ரி ஆகியோர் கல்முனையிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்து எம். வினோத்ராஜ் என்பவரும், அநுராதபுரத்திலிருந்து எம். சஜீராவும் தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றுள்ளனர்.
Comments
Post a Comment