பாடசாலைச் சிறார்களுக்கு இலவசமாக விட்டமின் வில்லைகள்!
பாடசாலைச் சிறார்களின் அறிவு விருத்திக்காக சத்துள்ள விட்டமின் வில்லைகளை இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இரும்புச் சத்துள்ள வில்லைகள், விட்டமின் சீ போன்ற வில்லைகளே இவ்வாறு பாடசாலை சிறார்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி வில்லைகளை மாணவர்கள் தொடர்ச்சியாக 6மாத காலத்துக்கு உட்கொண்டால் குறித்த மாணவர்களின் ஞாபகச்சக்தி, பாடங்களில் கரிசனை மற்றும் சுறுசுறுப்பு என்பன அதிகரிக்கும் என அமைச்சு நம்பிக்கை தெரிவிக்கிறது.
பிரதேச வைத்திய அதிகாரி அலுவலகத்தினூடாக பிரதேச வைத்திய பரிசோதகர்களின் உதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவிக்றது.
Comments
Post a Comment