சிறுவர் பாதுகாப்பு தொடர்பான மிளிரும் அட்டைவெளியீட்டு நிகழ்வும் சர்வதேச சிறுமியர் தினமும்


(சுரேஸ்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சிறுவர்  அபிவிருத்தி குழு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வாலிபர் கிருஸ்தவ  சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தசிறுவர்  பாதுகாப்பு தொடர்பான மிளிரும் அட்டை வெளியிட்டு நிகழ்வும்  சர்வதேச சிறுமியர்  தினசிறப்புநிகழ்வும் நாவற்குடா அருட்பணி சிறுமியர்  இல்லத்தில் மாவட்டஉதவிஅரசாங்கஅதிபர்  எஸ்.ரங்கநாதன் தலைமையில்  நேற்று  2014.10.30 நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதிகளாக வை.எம்.சீ.ஏநிறுவனத்தின் பொதுச் செயலாளர்  கலாநிதி டீ.டீ.டேவிட் இந் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர்  எஸ்.பற்றிக் சிறுவர்களுக்கான உரிமைகளை பாதுகாத்தல் செயற்திட்டத்தின் பயிற்சி இணைப்பாளர்  ஐஸ்வர்யா தேவி குகதாசன் சிறுவர்  பாதுகாப்பு உத்தியோகத்தர்  எம். அன்பழகன் மற்றும் மாவட்டசிறுவர் அபிவிருத்திஉத்தியோகத்தர்  வீ.குகதாசன் அத்துடன் இல்லத்தின் சிறுமியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர் 
அந்த வகையில் வை.எம்.சீ.ஏநிறுவனத்தின் அமுலாக்கத்தில் கலாநிதி.ஓகே.குணநாதனின் கதைவடிவமைப்பில் பதிப்பிக்கப்பட்டசிறுவர்  பாதுகாப்பு மற்றும் உரிமைகள் சம்மந்தமானவிழிப்புணர்வூட்டல் மிளிரும் அட்டை உத்தியோகபூர்வமாக முதல் புத்தகத்தைபொதுச் செயலாளரினால் மாவட்ட உதவிஅரசாங்க அதிபர்  எஸ்.ரங்கநாதன் வழங்கிவைக்கப்பட்டதுடன் இல்லத்தின் சிறுமியர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.








Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்