பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதியொதுக்கீட்டின் மூலம் பொத்துவில் அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் நுழைவாயில் கோபுர நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(ஹாசீப் யாஸீன்)



திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதியொதுக்கீட்டின் மூலம் பொத்துவில் அல்-கலாம் முஸ்லிம் வித்தியாலயத்தின் நுழைவாயில் கோபுர நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று பு (30)இடம்பெற்றது.
                        
 கல்லூரியின் முதல்வர் எம்.ஐ.எம்.சமீம் தலைமையில்இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர்.எல்.எம்.நஸீர்பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளா் எம்.எஸ்.எம்.வாசித், பிரதித் தவிசாளா் எம்.தாஜூதீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரதி அதிபர்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இப்பாடசாலையிலிருந்து 22 மாணவா்கள் தெரிவானதையிட்டு மாணவா்களுக்கும், கற்பித்த ஆசிரியா்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினா் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்